FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 21, 2016, 07:38:37 PM
-
முட்டை தக்காளி குழம்பு
தேவையானவை
முட்டை – 2
நாட்டுத்தக்காளி – 3
வெங்காயம் – 2
மஞ்சள்தூள், சோம்பு – கால் ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 3 ஸ்பூன்
பட்டை – சிறிய துண்டு
முந்திரிப்பருப்பு – 4
தேங்காய்த்துருவல் – 2 ஸ்பூன்
கொத்தமல்லி, உப்பு, எண்ணெய் – சிறிதளவு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpattivaithiyam.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F05%2Fmuttai-thakkali-kulambu-cooking-tips-in-tamilmuttai-thakkali-kulambu-samayal-kurippumuttai-thakkali-kulambu-in-tamil-e1463810716974.jpg&hash=a15e62e4615db1c465e8a01f697ee4b0990b93da)
செய்முறை:
சோம்பு, முந்திரிப்பருப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி 7 நிமிடம் கொதிக்க விடவும்.
பிறகு அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு திக்கானதும் இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.