FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 21, 2016, 06:11:51 PM
-
தக்காளி தேங்காய் பால் சொதி + ரசச் சொதி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F05%2Fnh-2-e1463813324649.jpg&hash=f5da7499ad9ebf179d5cbeda3e725021fad2b3a1)
தேவையான பொருட்கள் –
பச்சை மிளகாய் – 4 (காரத்திற்கேற்ப)
சின்ன வெங்காயம் – 7-8
தக்காளி – 2
கறிவேற்பிலை – 2 இலைகள்
ரம்பை – 1 துண்டு
சோம்பு – ¼ ரீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் பொடி விரும்பினால் – சிறிதளவு
தேங்காய்ப்பால் – 2 கப்
பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளியை வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
பாத்திரத்தில் போட்டு கறிவேற்பிலை, ரம்பை, சோம்பு, உப்பு, மஞ்சள் சேருங்கள்.
சிறிது தண்ணீர் விட்டு அவியுங்கள். அவிந்த பின் தேங்காய்ப் பால் ஊற்றி கலக்கிவிடுங்கள்.
பால்கொதிக்க ஆரம்பிக்கும்போதே கலக்கிவிட வேண்டும் இல்லாவிட்டால் ஆடைகட்டி திரண்டுவிடும்.
இரண்டு மூன்று கொதிவிட்டு இடையிடையே கலக்கி இறக்கிவிடுங்கள்.
தக்காளி,பச்சைமிளகாய் வாசத்துடன் சொதி தயாராகிவிட்டது.
தக்காளி தேங்காய்ப்பால் ரசச் சொதி
தேவையான பொருட்கள் –
தக்காளி- 2
பூண்டு – 4
மிளகு- ¼ தேக்கரண்டி
மல்லி -1 தேக்கரண்டி
செத்தல்மிளகாய்; -1
சின்ன வெங்காயம் – 5-6
தக்காளி – 2
கறிவேற்பிலை – 2 இலைகள்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் பொடி விரும்பினால் – சிறிதளவு
தேசிச்சாறு – ½ தேக்கரண்டி
தேங்காய்ப்பால் – 2 கப்
செய்முறை –
வெங்காயம், தக்காளியை வெட்டி வையுங்கள்.
மிளகு, தனியா, செத்தல்பொடிபண்ணி எடுங்கள்.
பூண்டைமுழுதாய்த் தட்டி எடுத்து வையுங்கள்.
இவை அனைத்தையும் பாத்திரத்தில் போட்டு கறிவேற்பிலை, உப்பு, மஞ்சள் சேருங்கள்.
சிறிது தண்ணீர் விட்டு அவியுங்கள்.
அவிந்த பின் தேங்காய்ப் பால் ஊற்றி கலக்கிவிடுங்கள்.
பால்கொதிக்க ஆரம்பிக்கும்போதே கலக்கிவிட வேண்டும் இல்லாவிட்டால்
ஆடைகட்டி திரண்டுவிடும்.
அடிக்கடி கலக்குங்கள்.
இரண்டு மூன்று கொதிவிட்டு இடையிடையே கலக்கி இறக்கிவிடுங்கள்.
தேசிச்சாறு விட்டுக்கலந்து விடுங்கள்.
உள்ளி, மிளகு, தேங்காய்ப்பால் வாசத்துடன் மூக்கைக் கிளறி சாப்பிட அழைக்கும்.
குறிப்புகள் :–
தக்காளி அலர்ஜி இருந்தால் தக்காளியைத் தவிர்த்துச் செய்யுங்கள். தேசிச்சாறு சற்றுக் கூடுதலாகச் சேருங்கள்.
விரும்பினால் சொதிவைத்து எடுத்தபின் தாளித்துக்கொட்டலாம்