FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on May 21, 2016, 01:59:20 PM

Title: ~ முகப்பருக்கள், தழும்புகள் பற்றிய கவலை இனி வேண்டாம்! ~
Post by: MysteRy on May 21, 2016, 01:59:20 PM
முகப்பருக்கள், தழும்புகள் பற்றிய கவலை இனி வேண்டாம்!

நாம் அன்றாடம் சமையலில் உபயோகிக்கும் பொருட்களில் சில அழகு சார்ந்த விஷயத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அது பற்றி கொஞ்சம் பார்ப்போம்,

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F05%2Fddd-5.jpg&hash=7b5bccab4252d66e1a96a5f8887b4c0ac635d701)

வெள்ளரி
பருக்களை ஒழிப்பதில் வெள்ளரிக்கு முக்கிய பங்கு உள்ளது. வெள்ளரிக்காயை அரைத்து அந்த கூழை மாஸ்க் போல முகத்தில் தடவி வர பருக்கள் குறையும்.
தேன்
எலுமிச்சை சாற்றுடன் தேன் கலந்து முகத்தில் பூசி வர முகப்பொலிவு கூடும்
ஆலிவ் ஆயில்
வாரம் ஒருமுறை ஆலிவ் ஆயிலை உடம்பு முழுவதும் தேய்த்து குளித்து வர மினுமினுப்பு அதிகரிக்கும். ஆலிவ் எண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணையையும் பயன்படுத்தலாம்
சர்க்கரை
சர்க்கரையை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்தால் இறந்த செல்களை அழித்து முகப்பொலிவை கூட்டுவதோடு மட்டுமல்லாமல் முகச்சுருக்கத்தையும் குறைத்து மிருதுவான சருமத்தை கொடுக்கும்
தக்காளி
தக்காளியை பேஸ்ட் செய்து முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் பூசி 15 நிமிடங்கள் காயவைத்து முகத்தை கழுவவும். இதனால் முகத்தில் உள்ள முகச்சுருக்கம், முகக்கருமை நீங்கும்
வைட்டமின் E மாத்திரை
இந்த மாத்திரையை நேரடியாக முகத்தில் பூசுவதன் மூலமும், மாத்திரையாக உட்கொள்வதின் மூலமும் முகத்தில் கருமை மாறுவதுடன் பளபளப்பாக இருக்கும்
பேக்கிங் சோடா
2 ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் விட்டு குழைத்து முகம், கழுத்து பகுதிகளில் வாரம் ஒருமுறை பூசி வர இறந்த செல்கள் நீங்கி முகம் ஜொலிக்கும்
கற்றாழை
கற்றாழையின் உட்புற சாற்றை முகத்தில் பூசிவர தழும்புகளும், கரும்புள்ளிகளும் நாளடைவில் மறைந்து முகம் பொலிவு பெறும்