FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on May 21, 2016, 01:48:18 PM
-
வேகமாக உடல் எடையைக் குறைக்கும் 3 நாள் மிலிட்டரி டயட்…. முயற்சி செய்யலாமே!…
(https://scontent-kul1-1.xx.fbcdn.net/v/t1.0-9/13256119_1574513529512783_818649986000108598_n.jpg?oh=a22c4771fd321503942629bc1a0a2f2e&oe=5799B374)
உடல் எடையைக் குறைக்க உதவும் பல டயட்டுகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் 3 நாள் மிலிட்டரி டயட் பற்றி கேள்விப்பட்டதுண்டா? ஆம், மிலிட்டரி டயட் என்பது ஒரே வாரத்தில் 4.5 கிலோ வரை எடையைக் குறைக்க உதவும் ஓர் 3 நாள் டயட்.
உண்மையிலேயே இது முடியுமா என்று கேட்டால், நிச்சயம் முடியும் என்று கூறலாம். ஏனெனில் பலர் இந்த டயட்டைப் பின்பற்றி உடல் எடையைக் குறைத்தோடு, நல்ல உடல் வடிவத்தையும் பெற்றுள்ளனராம்.
சரி, இப்போது அந்த 3 நாள் மிலிட்டரி டயட் குறித்து பார்ப்போம். அதைப் படித்து பின்பற்றி, உங்கள் உடல் எடையை வேகமாக குறையுங்கள்.
முதல் நாள்…
காலை உணவு
1/2 கிரேப்ஃபுரூட்/பப்பளிமாஸ் பழம், 1 துண்டு பிரட் டோஸ்ட், 2 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை வெண்ணெய், 1 கப் காபி அல்லது டீ
மதிய உணவு
1/2 கப் வேக வைத்த சூரை மீன், 1 துண்டு பிரட் டோஸ்ட், 1 கப் காபி அல்லது டீ
இரவு உணவு
100 கிராம் வேக வைத்த இறைச்சி, 1 கப் வேக வைத்த பச்சை பட்டாணி, 1/2 வாழைப்பழம், 1 ஆப்பிள், 1 கப் வென்னிலா ஐஸ் க்ரீம்
இரண்டாம் நாள்….
காலை உணவு
1 வேக வைத்த முட்டை, 1 துண்டு பிரட் டோஸ்ட், 1/2 வாழைப்பழம்
மதிய உணவு
1 கப் காட்டேஜ் சீஸ், 1 வேக வைத்த முட்டை 5 உப்பு பிஸ்கட்
இரவு உணவு
2 வேக வைத்த ஹாட் டாக்ஸ் (பன் இல்லாமல்), 1 கப் வேக வைத்த ப்ராக்கோலி, 1/2 கப் கேரட், 1/2 வாழைப்பழம், 1/2 கப் வென்னிலா ஐஸ் க்ரீம்
மூன்றாம் நாள்…
காலை உணவு
5 உப்பு பிஸ்கட், 1 துண்டு சீடார் சீஸ், 1 ஆப்பிள்
மதிய உணவு
1 வேக வைத்த முட்டை, 1 பிரட் டோஸ்ட்
இரவு உணவு
1 கப் வேக வைத்த சூரை மீன், 1/2 வாழைப்பழம், 1 கப் வென்னிலா ஐஸ் க்ரீம்