FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 21, 2016, 11:24:51 AM
-
சிக்கன் சுக்கா
தேவையான பொருட்கள்:
சிக்கன் – அரை கிலோ
பெரிய வெங்காயம் – 2
இஞ்சி பூண்டு விழுது -2 டீஸ்பூன்
கறிமாசால் தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரைஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
மிளகு – 2 ஸ்பூன்
சீரகம் – 2 ஸ்பூன்
மல்லித்தூள் – 2 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவைக்கு
மல்லி இலை – சிறிதளவு
பட்டை , கிராம்பு – சிறிதளவு
செய்முறை :
முதலில் கோழிக்கறியை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி கழுவி கொள்ளவும்.
பின்பு மிளகு ,சீரகத்தை மிக்சியில் போட்டு நன்கு பொடித்து வைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கிய எண்ணெயில் பட்டை , கிராம்பு போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம்,சேர்த்து நன்றாக வதக்கவும்.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpattivaithiyam.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F05%2FChicken-Sukka-cooking-tips-in-tamilChicken-Sukka-samayal-kurippuChicken-Sukka-in-tamilChicken-Sukka-seimuraiChicken-Sukka-samayal-kurippu-in-tamil-language-e1463731445821.jpg&hash=7dd8a186f4bec0a2f1cf99f37a718079790cbb86)
நன்றாக வதக்கிய பின் இஞ்சி, பூண்டு, சேர்த்து வதக்கவும் இஞ்சி பூண்டு வதக்கியவுடன் கோழிக்கறி சேர்த்து பிரட்டவும்
பின்பு மசாலா தூள்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்த்து நன்கு பிரட்டி கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து தேவையான உப்பு போட்டு கடாயை மூடி நன்கு வேக விடவும்.
கோழி ஓரளவு வெந்தவுடன் பொடித்து வைத்துள்ள மிளகு சீரகத்தை போட்டு நன்கு பிரட்டி விடவும்.
நன்றாக சுண்டி கோழிக்கறி நன்கு வெந்து வந்ததும் இறக்கி நறுக்கிய மல்லி இலை தூவவும். சுவையான சூப்பர் சிக்கன் சுக்கா ரெடி.