FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 21, 2016, 11:14:00 AM
-
தேங்காய் மட்டன் பிரட்டல்
மட்டன் – 1/2 கிலோ
சிறிய வெங்காயம் – 15
இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
தேங்காய் – 1/4 மூடி
மிளகு தூள் – சிறிதளவு
தாளிக்க:
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
பட்ட மிளகாய் – 5
கறிவேப்பிலை – கொஞ்சம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpattivaithiyam.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F05%2Fmutton-peratal-cooking-tips-in-tamilmutton-peratal-samayal-kurippumutton-peratal-in-tamilmutton-peratal-seimuraimutton-peratal-samayal-kurippu-in-tamil-language.jpg&hash=c56c1bc8073862fcca06e5d06e96181087e4a253)
செய்முறை:
* வெங்காயத்தை இரண்டிரண்டாக நறுக்கவும்.
* தேங்காயை மெல்லிய சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
* கொடுத்துள்ள பொருட்கள் (மிளகை தவிர) எல்லாவற்றையும் சேர்த்து குக்கரில் வேகவிடவும்.
* கடைசியில் மிளகு தூள் சேர்த்து சுருள வதக்கி இறக்கவும்.
* எண்ணைய் நல்லா சூடானதும் கறிவேப்பிலை, பட்ட மிளகாய் பொரித்து, கறி மீது ஊற்றி நன்கு பிரட்டவும்