FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 20, 2016, 11:30:31 PM
-
முருங்கைக்காய் கத்திரிக்காய் பொரியல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F05%2Fkuy.jpg&hash=40cbb085b37e70ae3847a761e3f05221ac8e70a2)
தேவையான பொருட்கள்:
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
முருங்கைக்காய் – 1 (நீள துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
கத்திரிக்காய் – 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கடுகு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் வெங்காயம், தக்காளி, முருங்கைக்காய், கத்திரிக்காய் சேர்த்து நன்கு வதக்கி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி, மூடி வைத்து 10 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.
காய்கள் நன்கு வெந்ததும், மூடியைத் திறந்து, மிளகாய் தூள் தூவி பிரட்டி, பச்சை வாசனை போனதும் இறக்கினால், முருங்கைக்காய் கத்திரிக்காய் பொரியல் ரெடி!!!