FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 16, 2016, 09:04:39 PM
-
காய்கறி வடை
தேவையானப்பொருட்கள்:
உளுத்தம் பருப்பு – 1/2 கப்
துவரம் பருப்பு – 1/2 கப்
பயத்தம் பருப்பு – 1/2 கப்
காய்ந்த மிளகாய் – 3
தேங்காய் துருவல் – 3 டேபிள்ஸ்பூன்
கேரட் – 1
பீன்ஸ் – 6 முதல் 8 வரை
முட்டைகோஸ் – சிறு துண்டு
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
கொத்துமல்லி இலை – ஒரு சிறிய கட்டு
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை – பொரிப்பதற்கு தேவையான அளவு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpattivaithiyam.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F10%2Fvegetables-vadaiveg-vadai-in-tamilcooking-tips-in-tamil-vegetables-vadaivadai-veg-samayal-kurippu-saiva-vadai-e1445426859165.jpg&hash=a94f569af11a05bf2158c3a0b67dde2ae9c74053)
செய்முறை:
உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, பயத்தம் பருப்பு மூன்றையும் ஒன்றாக 1 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் நன்றாகக் களைந்து கழுவி, தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு, அத்துடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல், கெட்டியாக அரைத்தெடுக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கேரட்டின் தோலை சீவி விட்டு துருவிக் கொள்ளவும், பீன்ஸை நீளவாக்கில் நான்காக வெட்டி, அதை சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். முட்டை கோஸயும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நறுக்கிய காய்கறி, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி இலை, தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் ஆகியவற்றை அரைத்து வைத்துள்ள மாவுடன் சேர்த்து நன்றாக பிசையவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும், ஒரு சிறு ஆரஞ்சு பழ அளவு மாவை எடுத்து வடையாக தட்டி, எண்ணையில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.