FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 16, 2016, 07:53:56 PM
-
தேங்காய் பூரண பூரி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F05%2Fmaxresdefault-1-e1463122352116.jpg&hash=ea43661a0c5947ad8545bd5b563c9659e4d57988)
தேவையானவை:
கோதுமை மாவு (அல்லது) மைதா மாவு – ஒரு கப், சர்க்கரை – அரை கப், ரவை – கால் கப், தேங்காய் துருவல் – அரை கப், எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை.
செய்முறை:
தேங்காய் துருவல், ரவை, சர்க்கரை மூன்றையும் கலந்து 10 நிமிடம் ஊறவிடவும். கோதுமை மாவு (அல்லது) மைதா மாவை ஒரு சிட்டிகை உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். உருண்டையை எடுத்து குழி போல் செய்து, அதில் தேங்காய் கலவையில் சிறிது வைத்து மூடி, மெல்லிய பூரியாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.
குறிப்பு: தேவையானால், பொடித்த சர்க்கரையை மேலே தூவி பரிமாறலாம்.