FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 15, 2016, 11:39:10 PM

Title: ~ ரவை நக்கட்ஸ் ~
Post by: MysteRy on May 15, 2016, 11:39:10 PM
ரவை நக்கட்ஸ்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F05%2FRava-Nuggets4-jpg-907.jpg&hash=5d1c4aa88645f60eb51670b162005170abb8aaee)

தேவையான பொருட்கள்:

பாம்பே ரவை – 1 கப்
சேமியா – 1 கப்
வெங்காயம் – 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி-பூண்டு விழுது – 2 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீ ஸ்பூன்
எலுமிச்சம்பழச்சாறு – 2 டீ ஸ்பூன்
மல்லித்தழை – சிறிது
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – தேவைக்கு

செய்முறை:

* 3 டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஒரு கடாயில் காய வையுங்கள்.
* அதில் வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து சிறு தீயில் வதக்குங்கள்.
* பின்னர் ரவையையும் சேருங்கள்.
* 5 நிமிடம் நன்கு வதக்கியபின், சேமியாவை கையால் நன்கு நொறுக்கி சேருங்கள்.
* அத்துடன் மிளகாய்த்தூள், மல்லி, உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள்.
* ஒரு பாத்திரத்தில் நாலரை கப் தண்­ணீர் கொதிக்க வைத்து, ரவை கலவையில் சேர்த்து நன்கு கிளறி இறுகும் வரை வேகவிடுங்கள்.
* கடைசியில் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து கிளறுங்கள்.
* ஆற வைத்து வேண்டிய வடிவத்தில் செய்துகொள்ளுங்கள்.
* மைதாவை சற்று கெட்டியாக கரைத்து, செய்து வைத்துள்ள ரவை நக்கட்ஸை அதில் நனைத்து எடுத்து, பிரெட் தூளில் புரட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள்.
* தக்காளி சாஸ், இதற்குப் பொருத்தமான காம்பினேஷன்.