FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 15, 2016, 11:36:13 PM
-
க்ரிஸ்ப்பி பாகற்காய்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F05%2Fpc-two-e1463121980480.jpg&hash=376aa31b262ec5aecc5c1c1d9505e04b5b54e3b3)
தேவையானவை
பாகற்க்காய் – 2
அரிசி மாவு – 1 தே.க
கடலைமாவு – 1 தே.க
மிளகாய் தூள் – ½ தே.க
மஞ்சள் தூள் – ½ தே.க
உப்பு – தேவைகேற்ப்ப
எண்ணெய் – பொரிப்பதற்க்கு
செய்முறை
பாகற்க்காயை நன்றாக தண்ணிரில் கழுவி ¼ இன்ஞ் கனத்தில் வட்ட வடிவமாக கட் செய்யவும்.
தண்ணிரில் உப்பு,மஞ்சள் தூள் கலந்து அதில் கட் செய்த
பாகற்க்காயை போட்டு வைக்கவும்.
ஐந்து நிமிடத்திற்க்கு பின் எடுத்து ஒரு பேப்பர் டவலில்
பரத்தி வைக்கவும்.
ஒரு தட்டில் மாவு,மிளகாய்தூள்,உப்பு, எல்லாம் சேர்த்து நன்றாக
கலந்து வைக்கவும், தண்ணிர் சேர்க்க வேண்டாம். உலர்பொடியாக இருக்கவேண்டும்.
உலந்த பாகற்காயை மாவு கலவையில் பிசிறி எண்னெயில்
பொன்நிறமாக பொரித்தெடுக்கவும்.
பாகற்காயின் கசப்பே தெரியாமல் எல்லாம் காலியாகிவிடும்.
இதை தயிர்சாதம், சாம்பார் சாதம், சேர்த்து சாப்பிடலாம்.
இதே போல் வெண்டை, காலிப்ஃளவர், வாழைக்காய்,சேனை
போன்றவற்றிலும் செய்யலாம்.