FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 15, 2016, 10:18:07 PM
-
வல்லாரை கீரை துவையல்
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
முழு மிளகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 10
பூண்டு – 5
காய்ந்த சிவப்பு மிளகாய் – 2
வல்லாரை கீரை – 2 கப்
தேங்காய் – 2 தேக்கரண்டி
வெல்லம் / சர்க்கரை – 1 தேக்கரண்டி
புளி பல்ப் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpattivaithiyam.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F05%2FVallarai-Keerai-Thuvaiyal-Recipe-Vallarai-Keerai-Thogayal-Recipe-Brahmi-Leaves-Chutney-Recipe.jpg&hash=421963bc7dd1e64651899d076f697052b4c1c74c)
முதலில் வல்லாரை கீரை கழுவி வைக்கவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு, மிளகு, சீரகம் சேர்த்து அதில் காய்ந்த சிவப்பு மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும், அவற்றை ஒரு ஜாரில் போட்டு வைக்கவும். அதே கடாயில் வல்லாரை கீரை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். இதில் தேங்காய் சேர்த்து வதக்கி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். இப்போது புளி, உப்பு, வெல்லம் சேர்த்து மீண்டும் அரைக்கவும். சுவையான வல்லாரை கீரை துவையல் தயார்.