FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 14, 2016, 09:32:30 PM

Title: ~ இத்தாலியன் ஹாட் சாக்லேட் ~
Post by: MysteRy on May 14, 2016, 09:32:30 PM
இத்தாலியன் ஹாட் சாக்லேட்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F05%2Fcas.jpg&hash=97ce22deb07e9927ff9db810190ab7329471b396)

தேவையான பொருட்கள் :

பால் – 3 கப்
சோள மாவு – 1 டீஸ்பூன்
சாக்கோ சிப்ஸ் – 6 டேபிள் ஸ்பூன்
தேன் – 2 டீஸ்பூன்
சர்க்கரை – 2 டீஸ்பூன்
கொக்கோ பவுடர் – 2 டீஸ்பூன்

செய்முறை :

* முதலில் பாலில் சோள மாவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
* ஒரு அடி கனமாக பாத்திரத்தில் அடுப்பில் வைத்து சோள மாவு கலந்த பாலை ஊற்றி சூடேற்றவும்.
* அத்துடன் சாக்கோ சிப்ஸ் மற்றும் தேன் சேர்த்து, குறைவான தீயில் தொடர்ந்து கிளறி கொண்டடே இருக்க வேண்டும்.
* சாக்கோ சிப்ஸ் முற்றிலும் கரைந்ததும், அதில் கொக்கோ பவுடர் மற்றும் சர்க்கரை சேர்த்து, ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கி, டம்ளரில் ஊற்றி பரிமாறினால், இத்தாலியன் ஹாட் சாக்லேட் ரெடி.

குறிப்பு :

* விருப்பப்பட்டால் இந்த ஹாட் சாக்லேட்டுடன் 1/4 டீஸ்பூன் வென்னிலா எசன்ஸ் சேர்த்துக் கொள்ளலாம்.
* இதில் சேர்க்கப்பட்டுள்ள சோள மாவு, இந்த பானத்தை கெட்டித்தன்மைக்காக சேர்க்கப்பட்டுள்ளது. உங்களுக்கு ஹாட் சாக்லேட் இன்னும் சற்று கெட்டியாக வேண்டுமானால், சற்று அதிகமாக சோள மாவை சேர்த்துக் கொள்ளலாம்.
* இந்த ஹாட் சாக்லேட் பானத்தை முழுமையாக குறைவான தீயில் தான் செய்ய வேண்டும்.