FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 14, 2016, 09:26:32 PM
-
கார சட்னி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F05%2FXA.jpg&hash=0f94dfebde2012fe1e3fdf30649e42dc2834889f)
தேவையானப்பொருட்கள்:
வத்தல் – 6
தக்காளி- 1
சின்ன வெங்காயம் – 10
கறிவேப்பிலை- 2கொத்து
உப்பு- தேவைகேற்ப்ப
தாளிக்க:
கடுகு
உளுத்தம் பருப்பு
கறிவேப்பிலை
நல்லெண்ணெய் – 2டீஸ்பூன்
செய்முறை:
தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து கொள்ள வேண்டும்.
எடுத்தவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்றாக (தாளிக்க கொடுத்தவை தவிர) அரைத்து கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவையை போட்டு தாளிக்க வேண்டும்.
அதில் அரைத்த விழுதை போட்டு நன்றாக கிளற வேண்டும்.
இரண்டு நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
இப்போது சுவையான ஈசியான காரசட்னி ரெடி.