FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 12, 2016, 10:16:35 PM

Title: ~ ஸ்டஃப்டு பன்னீர் பப்பட் செய்வது எப்படி ~
Post by: MysteRy on May 12, 2016, 10:16:35 PM
ஸ்டஃப்டு பன்னீர் பப்பட் செய்வது எப்படி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F05%2F201605071411592474_how-to-make-Masala-Papad-Stuffed-Roll_SECVPF.jpg&hash=7fd146e6598f6f5d06ea2f3ef0fd05145ba8be6f)

தேவையான பொருட்கள் :

மசாலா அப்பளம் – 10,
உருளைக்கிழங்கு (பெரியது) – ஒன்று,
துருவிய பன்னீர் – 50 கிராம்,
கரம்மசாலாத்தூள் – ஒரு சிட்டிகை,
எலுமிச்சைச் சாறு – சிறிதளவு,
பச்சை மிளகாய் விழுது, எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:
 
* உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி, துருவிக்கொள்ளவும்.
* அத்துடன் உப்பு, துருவிய பன்னீர், பச்சை மிளகாய் விழுது, கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து வைக்கவும்.
* ஒவ்வொரு அப்பளத்தையும் தண்ணீரில் நனைத்து உடனே எடுத்து சுத்தமான துணியால் ஒற்றியெடுக்கவும்.
* உருளைக்கிழங்கு கலவையில் சிறிதளவு எடுத்து அப்பளத்தின் ஒரு பக்கம் வைத்து மெதுவாக உருட்டி தண்ணீரை தொட்டு ஓரங்களை அழுத்தி ஒட்டவும். இதே போல் எல்லா அப்பளங்களையும் செய்யவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டிய அப்பளங்களை ஒவ்வொன்றாக அதில் போட்டு பொரித்தெடுக்கவும்.
* சாஸ் உடன் சூடாகப் பரிமாறவும்.
* சுவையான ஸ்டஃப்டு பன்னீர் பப்பட் ரெடி.