FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on May 12, 2016, 08:45:13 PM

Title: ~ ஏன் சாப்பிடும் போது பேசக்கூடாது தெரியுமா? ~
Post by: MysteRy on May 12, 2016, 08:45:13 PM
ஏன் சாப்பிடும் போது பேசக்கூடாது தெரியுமா?

(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xtf1/v/t1.0-9/13174156_1571381583159311_4767242595738364097_n.jpg?oh=6969fdd40bb54893c2dc2bc4983c7b1d&oe=57DFA66F&__gda__=1474838727_eace81398b9a0d25271c3181999e3f97)

உணவுக் குழாய்க்குள் காற்றோ, சுவாசக் குழாய்க்குள் உணவுப் பொருளோ போய்விடக்கூடாது என்பதற்காகத்தான் பேசிக்கொண்டே சாப்பிடக்கூடாது என்கிறார்கள்.

மனித முகத்தில் மண்டை ஓட்டின் அதாவது கபாலத்தின் அடிப்பகுதியில் தொடங்கி குரல் வளையின் கீழ் பகுதி வரை தொண்டை என்கிறது, மருத்துவம். இந்த தொண்டையை மேலும் மூன்று பகுதிகளாக பிரிக்கிறார்கள். அவை: முகத்தோடு இணைந்த தொண்டை, வாயோடு இணைந்த தொண்டை, குரல் வளையோடு இணைந்த தொண்டை.
வாயிலிருந்து உணவுக் குழாயானது தொண்டை வழியாக வயிற்றுக்குப் போகிறது. அதேபோல் மூக்கிலிருந்து சுவாசக்குழாயும் தொண்டை வழியாக உணவுக் குழாயைக் கடந்து நுரையீரலுக்குப் போகிறது. இது கிட்டத்தட்ட ஒரு லெவல் கிராசிங் போன்றது.