FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 11, 2016, 11:39:40 PM
-
நண்டு தக்காளி சூப்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F05%2Fzqw.jpg&hash=9d631d9c0f865cbbb8ef4f89c3bf4810ec2deaa7)
தேவையான பொருட்கள் :
பெரிய நண்டு – 2
தக்காளி விழுது – அரை கப்
வெங்காயம் – ஒன்று
இஞ்சி – ஒரு அங்குலத் துண்டு
மிளகு – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
முட்டை – 2
சிக்கன் ஸ்டாக் – ஒரு கட்டி
செய்முறை :
முதலில் நண்டின் ஓட்டை எடுத்து கழுவி சுத்தம் செய்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.
வெந்த நண்டின் சதை பகுதியை ஒரு பாத்திரத்தில் போட்டு உதிர்த்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வெந்நீரில் சிக்கன் ஸ்டாக் கட்டியை கரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அடித்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தக்காளி விழுது, நறுக்கிய வெங்காயம், இஞ்சி விழுது, உதிர்த்த நண்டு கறி, உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும்.
5 நிமிடம் வெந்த பிறகு கரைத்த சிக்கன் ஸ்டாக், மிளகுத் தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு அதில் அடித்த முட்டையை மெதுவாக வடிகட்டி சேர்த்துக் கலக்கவும்.