FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on May 11, 2016, 10:26:21 PM
-
தக்காளி பழத்தை முகத்தில் தடவுங்கள்! அழகு ஜொலிக்கும்
சிலரது முகம் எண்ணெய் பசை கொண்ட முகமாக இருக்கும், அதனால் என்னதான் மேக்கப் போட்டாலும் அழகாக எடுத்துக்காட்டாது.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F05%2Fvds.jpg&hash=8ac24920452447b5021bac8fc8f3bf2eb8c6bcaf)
அதனால் எண்ணெய் பசை கொண்ட சருமத்தை போக்குவதற்காக சில வழிகள் உள்ளன.
அப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசைகுறையும்.
தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன்,ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து,அந்த கலவையை முகத்தில் பூசிசுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு,முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய்விடும்.
தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில்தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசைகுறையும்.
மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப்பொலிவடையும். பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.
ஒவ்வொருவருக்கும்2 வகையான சருமம் உள்ளது. ஒன்றுஉலர்ந்த சருமம். மற்றது எண்ணெய்வடியும் சருமம். எல்லா வகையான சருமத்தையும் இந்த கோடை வெயிலில்இருந்து பாதுகாக்க வேண்டும்.
உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் உடலில் பூசிபின் குளிர்ந்த நீரில் கழுவி விடவேண்டும்.
இதே போல் எண்ணைவழியும் சருமத்திற்கு மருந்து கடைகளில் இருந்து மூலிகை கலந்த பவுடரை வாங்கிபூசிக் கொள்ளலாம். இதன் மூலம் முகம் பொலிவாகும்.