FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: SiVa000000 on May 09, 2016, 12:03:43 PM

Title: உருளைக்கிழங்கு மட்டன் மசாலா செய்வது எப்படி
Post by: SiVa000000 on May 09, 2016, 12:03:43 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2F5b1RjxZ.jpg&hash=f5aa52f77397959972d2d7f5070daffdef0d4457)

தேவையான பொருட்கள் :

மட்டன் - 500 கிராம்
உருளைக்கிழங்கு - 2 சிறியது
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 3
இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1
சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)
பட்டை - சிறிய துண்டு
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் -  தேவையான அளவு
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவைக்கேற்ப

செய்முறை :

* மட்டனை துண்டுகளாக வெட்டி நன்றாக கழுவி வைக்கவும்.

* உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலையை நறுக்கிக் கொள்ளவும்.

* பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.

* பிரஷர் குக்கரில் எண்ணெய்யை சூடாக்கி, உருளைக்கிழங்கு சேர்த்து சில நிமிடங்கள் வறுக்கவும். அவற்றை குக்கரில் இருந்து நீக்கி தனியாக வைக்கவும்.

* அடுத்து குக்கரில் பட்டை மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கிய பின் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

* இஞ்சி-பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் நறுக்கிய தக்காளி, மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் சீரகத் தூள் சேர்த்து கிளறி 5 நிமிடங்கள் வதக்கவும்.

* அடுத்து அதில் மட்டன் துண்டுகளை உப்புடன் சேர்த்துக் 5 நிமிடங்கள் கிளறவும்.

* குக்கரை மூடி 3 விசில் வைத்த பின் அடுப்பின் தீயை குறைத்து 15 நிமிடங்கள் அடுப்பில் வைக்கவும்.

* பிரஷர் அடங்கியவுடன் மூடியைத் திறந்து மிதமான சூட்டில் குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.

* திக்கான பதம் வந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

* சுவையான உருளைக்கிழங்கு மட்டன் மசாலா ரெடி.

- உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Title: Re: உருளைக்கிழங்கு மட்டன் மசாலா செய்வது எப்படி
Post by: LoShiNi on May 09, 2016, 12:06:30 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fus.123rf.com%2F450wm%2FKrisdog%2FKrisdog1509%2FKrisdog150900059%2F44878457-a-cartoon-emoji-emoticon-drooling-with-his-tongue-hanging-out.jpg%3Fver%3D6&hash=a61818477320dd03695dc83af7ee4ee2b51b2476)