FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 08, 2016, 09:40:29 PM
-
முட்டை வட்லாப்பம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F05%2Frty.jpg&hash=ce67ec06b1113947c1fa4537bf6dceddb5b22483)
தேவையான பொருட்கள் :
முட்டை – 10
கருப்பட்டி – 2 டம்ளர்
தேங்காய் – 1
ஏலக்காய் – 3
முந்திரி – 6
நெய் – 1/2 டீஸ்பூன்
அலங்கரிக்க…
பாதாம்,
முந்திரி – தேவைக்கேற்ப.
செய்முறை :
தேங்காயை அதிகம் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து, கெட்டியாகப் பால் எடுக்கவும். முட்டையை நன்கு நுரை பொங்க அடிக்கவும்.
கருப்பட்டியைப் பொடித்து வைக்கவும். கருப்பட்டி, தேங்காய்ப் பால், முட்டை மூன்றையும் நன்கு கலக்கவும்.
முந்திரியைப் பொடியாக அரிந்து நெய்யில் வறுத்துச் சேர்க்கவும்.
ஏலக்காயை பிரித்து, உள்ளே உள்ள விதையை எடுத்து இலேசாக வறுத்துப் பொடித்துச் சேர்த்து, நன்கு கலக்கி, குக்கரின் அடியில் வைக்கும் தட்டை வைத்து அதன் மேல் ஒரு டிபன் பொக்ஸில் கலவையை ஊற்றி மூடிவிட்டு குக்கரை மூடி 5 விசில் விட்டு 10 நிமிடங்கள் சிம்மில் வைத்து அவிக்கவும்.
*இடியப்பம், அப்பம், தோசைக்கு நல்ல சைட் டிஷ்.
கருப்பட்டியை விரும்பாதவர்கள் அதன் அளவை அரை டம்ளர் குறைத்துக் கொள்ளலாம்.