FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 08, 2016, 09:20:07 PM
-
சொக்லேட் சிப்ஸ் குக்கீஸ்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F05%2Fthq-e1462377477836.jpg&hash=5435cba66fa871b1a3935840729053abbf5c5713)
தேவையான பொருட்கள் :
சொக்லேட் (துருவியது) – 2 கப்
வெண்ணெய் – 150 கிராம்
சீனி – 300 கிராம்
உப்பு – ஒரு சிட்டிகை
சோடா உப்பு – 1 சிட்டிகை
முந்திரி அல்லது வால்நட் (பொடியாக நறுக்கியது) – 1 கப்
மைதா மா – 300 கிராம்
வெனிலா எசென்ஸ் – 2 டீஸ்பூன்
முட்டை – 2
வெண்ணெய் – சிறிது.
செய்முறை :
முதலில் மைதாவைச் சலித்துக் கொள்ளவும்.
வெண்ணெயையும் சீனியையும் சேர்த்து அடித்துக் கொள்ளவும்.
இத்துடன் சோடா உப்பு, உப்பு சேர்த்து கலந்து அடித்துக் கொள்ளவும்.
அத்துடன் எசென்ஸ் சேர்க்கவும். நுரைக்க அடித்த முட்டையைச் சேர்த்துக் கைவிடாமல் அடிக்கவும்.
அத்துடன் சலித்த மாவைச் சிறிது சிறிதாகக் கலக்கவும். கடைசியில் சொக்லேட் துருவல், நறுக்கிய முந்திரிப் பருப்பு சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக்கி வெண்ணெய் தடவி, மா தடவிய டிரேயில் வைத்து 180°C சூட்டில் மைக்ரோவேவ் அவனில் பேக் செய்யவும்.