FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 08, 2016, 05:54:03 PM
-
வல்லாரைக்கீரை பருப்பு கூட்டு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F05%2Fvallaa.jpg&hash=52991b8d6542e59cca7cfd342e132a2ea78507dc)
தேவையான பொருள்கள்
வல்லாரைக்கீரை – 1 கட்டு
பாசிப்பருப்பு – 1 கைப்பிடி அளவு
தக்காளி – 1
சின்ன வெங்காயம் – 5
உப்பு – தேவையான அளவு
மஞ்சள்தூள் – கால் ஸ்பூன்
வறுத்து அரைக்க:
உளுத்தம்பருப்பு – 3 ஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 2
துருவிய தேங்காய் – சிறிதளவு
தாளிக்க:
நெய் – 1 ஸ்புன்
கடுகு, கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
வல்லாரைக்கீரையை சுத்தம் பண்ணி நன்கு கழுவிக் கொள்ளவும்.
பிறகு அதை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அதனுடன் பாசிப்பருப்பு, தக்காளி , வெங்காயம்,மஞ்சள்தூள் அனைத்தையும் குக்கரில் போட்டு 2 விசில் விட்டு வேக வைத்து இறக்கவும்
பின்பு கடாயில் வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு வறுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்
பிறகு அதே கடாயில் நெய் ஊற்றி கடுகு, மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வேகவைத்து வைத்திருக்கும் கீரையை சேர்த்து கொதிக்க விடவும்.
அதனுடன் அரைத்து வைத்திருக்கும் கலவை மற்றும் உப்பு சேர்த்து மேலும் ஒரு கொதிவிட்டு இறக்கவும். வல்லாரைக்கீரை கூட்டு ரெடி.