FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 08, 2016, 05:44:31 PM
-
நூக்கல் புட்டு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F05%2Fnoo-e1462510980253.jpg&hash=1505ff3ae9c90dba0be7e5acd3cbf5138059c3af)
தேவையான பொருட்கள்
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
பட்டை – இரண்டு துண்டு
சோம்பு – கால் டீஸ்பூன்
இஞ்சி – கால் டீஸ்பூன் (நறுக்கியது)
பூண்டு – அரை டீஸ்பூன் (நறுக்கியது)
கறிவேப்பலை – சிறிதளவு
வெங்காயம் – ஒன்று (நறுக்கியது)
பச்சை மிளகாய் – இரண்டு (நறுக்கியது)
நூக்கல் – ஒரு கப் (துருவல்) தண்ணீர் நீக்கியது
கடலை பருப்பு – அரை கப் (அரை மணி நேரம் ஊறவைத்து , ஒன்றும் பதியும்மாக அரைத்து கொள்ளவும்)
உப்பு – தேவைகேற்ப
மஞ்சள் தூள் – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, சோம்பு, இஞ்சி, பூண்டு, கறிவேப்பலை, வெங்காயம், பச்சை மிளகாய், நூக்கல் திருவல், கடலை பருப்பு அரைத்தது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி மூடி போட்டு வைத்து விடவும் இருபது நிமிடங்களுக்கு குறைந்த தீயில் வைக்கவும்.
பின் எடுத்து கிளறி கொத்தமல்லி துவி சூடாக பரிமாறவும்.