FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 03, 2016, 10:30:44 PM
-
மலபார் பரோட்டா
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F03%2Fparatha-9.jpg&hash=372e03140b8bc1687f0ce6fbe7606dd0e910ac9a)
தேவையானவை:
மைதா மாவு – அரை கிலோ, முட்டை (விருப்பப்பட்டால்) – ஒன்று, பால் – 100 மில்லி, தயிர் – 50 மில்லி, தூள் உப்பு, சர்க்கரை – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், தண்ணீர் – தேவைக்கேற்ப.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் முட்டை, பால், தயிர், தூள் உப்பு, சர்க்கரை அனைத்தும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர், அதில் தண்ணீர் ஊற்றிக் கலக்கவும். அதனுடன் மைதா மாவை சேர்த்து நன்றாகப் பிசைந்து, சுமார் ஒன்றரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, சிறிது மாவை எடுத்து உருண்டையாக செய்து, தட்டி, இரண்டு கைகளிலும் வீசி, மடித்து மீண்டும் தட்டி… தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுக்கவும். பிறகு, அதனை கைகளில் வைத்து அடித்து பரிமாறவும்.