FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 03, 2016, 10:17:51 PM
-
வெண்டைக்காய் வறுவல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F03%2Ffree.jpg&hash=7f024d3072f67a263c52c6675515a9d6d1a69b3e)
வெண்டைக்காய் – கால் கிலோ
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
சீரகம் – அரை தேக்கரண்டி
பெருங்காயம் – ஒரு சிட்டிகை (விரும்பினால்)
உள்ளே வைக்க:
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
மல்லி தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – சிறிது
உப்பு – சுவைக்கு
அம்சூர் பொடி – அரை தேக்கரண்டி
பெருஞ்சீரகம் (வறுத்து பொடித்தது) – ஒரு தேக்கரண்டி (விரும்பினால்)
வெண்டைக்காயை கழுவி ஈரம் இல்லாமல் துடைத்து வைத்துக் கொள்ளவும். பொடி வகைகள் அனைத்தையும் கலந்து வைத்துக் கொள்ளவும்.
வெண்டைக்காயின் ஏதேனும் ஒரு பகுதியில் கத்தியால் கீறி விடவும்.
அதில் கலந்து வைத்திருக்கும் பொடியை உள்ளே வைத்து மூடவும்.
இதைப் போலவே எல்லா வெண்டைகாயிலும் செய்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், பெருங்காயம் போட்டு தாளிக்கவும்.
இதில் வெண்டைக்காய்களை போட்டு மூடி மிதமான தீயில் வைத்து வெந்ததும் எடுக்கவும்.
சுவையான வெண்டைக்காய் வறுவல் ரெடி. காய்கள் கலர் மாறாமல் பார்த்துக் கொள்ளவும். தயிர் சாததுடன் சாப்பிட பொருத்தமாக இருக்கும். கூட்டாஞ்சோறு பகுதியின் மூலம் தனது குறிப்புகளை பகிர்ந்துக் கொண்டுள்ள வனிதா வில்வாரணிமுருகன் அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ள குறிப்பு இது.