FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 03, 2016, 09:52:43 PM

Title: ~ கறிப் பிரட்டல் ~
Post by: MysteRy on May 03, 2016, 09:52:43 PM
கறிப் பிரட்டல்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F03%2F-%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25B2%25E0%25AF%258D-e1457015447307.jpg&hash=b7e71453fe3e70c04a994c913baafbc6ab24d850)

தேவையானப் பொருட்கள்

ஆட்டுக் கறி – அரை கிலோ
சி. வெங்காயம் – நூறு கிராம்
மிளகாய்ப் பொடி – ஒரு டேபிள் ஸ்பூன்
மல்லிப் பொடி – ஒரு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி – ஒரு டீ ஸ்பூன்
இலை, அன்னாசிப்பூ – தாளிக்க
எண்ணை – மூன்று டேபிள் ஸ்பூன்
உப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
சோம்பு – அரை டீ ஸ்பூன்
கறிவேப்பிலை – இரண்டு கொத்து

அரைக்க:

சோம்பு – ஒரு டீ ஸ்பூன்
சீரகம் – ஒரு டீ ஸ்பூன்
கசகசா – ஒரு டீ ஸ்பூன்
பட்டை – ஒரு சிறிய துண்டு
இஞ்சி – ஐந்து கிராம்
பூண்டு – ஆறு பல்
தேங்காய் துருவல் – மூன்று டேபிள் ஸ்பூன்
கறிப் பிரட்டல்

செய்முறை

முதலில் கறியை கழுவி சிறியதாகவும் இல்லாமல் பெரியதுமாகவும் இல்லாமல் நடுத்தர அளவு துண்டுகளாக நறுக்கவும்.
வெங்காயத்தை இரண்டிரண்டாக குறுக்கில் நறுக்கி வைக்கவும்.
அரைக்க வைத்துள்ளவற்றில் தேங்காயை தனியாகவும், மற்ற சாமான்களை தனியாகவும் அரைத்து வைக்கவும்.
அடுப்பில் குக்கரை வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணை விட்டு இலை, அன்னாசிப்பூ தாளிக்கவும்.
பின் வெங்காயத்தைப் போட்டு வதக்கி கறி சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
பிறகு மல்லிப் பொடி, மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, உப்பு, அரைத்த சோம்பு மசாலா விழுது போட்டு இரண்டு நிமிடம் கிண்டி அரை டம்ளர் தண்ணிர் விட்டு குக்கரை மூடி நான்கு விசில் விட்டு இறக்கவும்.
வெந்ததும் குக்கரைத் திறந்து தேங்காய் விழுது சேர்த்து மேலும் ஐந்து நிமிடம் மூடாமல் வேக வைக்கவும்.
அடுப்பில் வானலியை வைத்து மீதமுள்ள ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணை விட்டு சோம்பு போட்டு பொரிந்ததும் இரண்டு சின்ன வெங்காயம் தட்டிப் போட்டு சிவந்ததும் கறிவேப்பிலை உருவிப் போடவும்.
குக்கரில் உள்ள கறிக் கலவையை கொட்டி மூடி, அடுப்பை அனைத்து விடவும்