FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 02, 2016, 10:45:49 PM
-
குழந்தைகளுக்கு விருப்பமான ஓமப்பொடி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F04%2Fvgf-e1462029566213.jpg&hash=6cc6182b8f7f56d90acdc1081f68c6b8dbd86037)
தேவையான பொருட்கள் :
கடலை மாவு – 1 கப்
அரிசி மாவு – 1/4 கப்
ஓமம் – 1 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
சூடான எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – ஒரு கையளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை :
* ஓமத்தை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் அந்த தண்ணீரை வடிகட்டி கொள்ளவும்.
* ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, வெண்ணெய், சூடான எண்ணெய், பெருங்காயத் தூள், ஓமம் வடிகட்டிய தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும். முறுக்கு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், சிறு துளையுள்ள முறுக்கு அச்சியில் மாவை போட்டு எண்ணெயில் நேரடியாக பிழிய வேண்டும்.
* ஓமப்பொடி பொன்னிறமாக பொரித்து வந்ததும் தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
* இதுப்போன்று அனைத்து மாவையும் பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியில் கறிவேப்பிலையை அந்த எண்ணெயில் போட்டு பொரித்து, ஓமப்பொடியுடன் சேர்த்து, கையால் உதிர்த்துவிட்டால், ஓமப்பொடி ரெடி!!!