FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 02, 2016, 09:35:21 PM

Title: ~ இறால் சில்லி 65 ~
Post by: MysteRy on May 02, 2016, 09:35:21 PM
இறால் சில்லி 65

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F04%2Fghy.jpg&hash=146b55061af14347ce6278e2185c1422dee5b5a8)

தேவையான பொருட்கள்:

இறால் – 20
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

ஊற வைப்பதற்கு…

மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
கரம் மசாலா – 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு – 1/4 கப்
கொத்தமல்லி – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – சிறிது

செய்முறை:

முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியில் இறாலை சேர்த்து 2-3 நிமிடம் பச்சை வாசனைப் போக பாதியாக வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின் அதனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பிரட்டி 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
எண்ணெய் சூடானதும், இறால் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், இறால் சில்லி 65 ரெடி!!!