FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 02, 2016, 09:00:04 PM
-
கடலை மா லட்டு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F05%2Fnhg-e1462111397433.jpg&hash=38e68c1a1fc9ab8205953103a3b145d315b580c2)
தேவையான பொருட்கள்
கடலை மா – 1 கப்
நெய் – 1/2 கப்
பால் – 1/2 கப்
ஏலக்காய் தூள் – 1/4 டீஸ்பூன்
பாதாம் – 2 (நீளவாக்கில் சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்)
பொடித்த சீனி – 1/2 கப்
செய்முறை
ஒரு சூடான கடாயில் நெய் உருகும் வரை சிறு தீயில் வைக்கவும்.
அதில் கடலை மா சேர்த்து 4 – 5 நிமிடங்கள் வறுக்கவும் (பச்சை வாசம் போகும் வரை).
அடுப்பை அணைத்து, மாக் கலவையில் பால் சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கலக்கவும்.
இலேசாக ஆறியதும், பொடித்த சீனி, ஏலக்காய் தூள் சேர்த்து சிறிய உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.
நறுக்கிய பாதாம் சேர்த்துப் பரிமாறவும்.