FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 02, 2016, 04:00:41 PM
-
சாம்பார் பொடி செய்வது எப்படி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F03%2Fsam-e1457797395810.jpg&hash=d5fe872bf63d4c653f7a47246cc334cc28670f49)
தேவையான பொருள்கள்:
துவரம் பருப்பு – 100 கிராம்
கடலைப்பருப்பு – 50 கிராம்
மிளகாய் வற்றல் – 1/4 கிலோ
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
தனியா – 1/2 கிலோ
மிளகு – 20 கிராம்
சீரகம் – 20 கிராம்
வெந்தயம் – 5 கிராம்
பெருங்காயத்தூள் – தேவைக்கேற்ப
செய்முறை:
* மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை ஒரு தட்டில் கொட்டி வெயிலில் நன்றாக காயவைத்து எடுத்து மிதமான தீயில் தனித்தனியாக வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் அல்லது மிஷினில் கொடுத்து அரைத்து வைத்து கொள்ளலாம்.
* இதில் வாசனைக்காக கறிவேப்பிலை சேர்க்கலாம்.
* இந்த சாம்பார் பொடி போட்டு சாம்பார் செய்தால் மணக்கும். மேலும் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
குறிப்பு:
சாம்பார் பொடி தயாரிக்கும் போது, வறுக்கும் பொருட்கள் கருகிவிடாமல் பார்த்து கொள்ளவேண்டும்.