FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 02, 2016, 03:51:15 PM
-
பூசணிக்காய் கறி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F04%2F%25E0%25AE%25AA%25E0%25AF%2582%25E0%25AE%259A%25E0%25AE%25A3%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AF%258D-%25E0%25AE%2595%25E0%25AE%25B1%25E0%25AE%25BF.jpg&hash=670423555aac13d938d3c6a2fd986cdb57ac2293)
மஞ்சள் பூசனிக்காய் – 1 (சிறியது மற்றும் நறுக்கியது)
வெந்தயம் – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – ½ தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 தேக்கரண்டி
தேங்காய் துருவியது –1/2 கப்
மிளகு – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2
வெங்காயம் – பாதி (நறுக்கியது )
கருவேப்பிலை
பூசணிக்காய் கறி
செய்முறை
முதலில் பூசணிக்காயை நன்கு சுத்தம் செய்து துண்டுகளா வெட்டி வைக்கவும். பின் மிக்ஸ்யில் துருவிய தேங்காய், சீரகம், மிளகு, சிறிதளவு தண்ணீர் விட்டு லேசாக அரைத்து வைத்து கொள்ளவும். பிறகு வாணலியில் சட்டி வைத்து எண்ணெய் காய்ந்ததும் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், வெங்காயம், மஞ்சள்தூள், பூசணிக்காய் துண்டுகளைப் போட்டு 3-4 நிமிடம் மிதமான தீயில் நன்கு வதக்க வேண்டும். பின் அதனுள் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை, உப்பு சேர்த்து தட்டு கொண்டு மூடி 5 நிமிடம் வேக வைத்து இறக்கும் போது கருவேப்பிலை போட்டு இறக்கி பரிமாறவும். இவ்பூசணிக்காய் கறியினை விரத நேரங்களில் சமைப்பது இன்னும் சிறப்பாகும்.