அடடா! அதற்குள் இது 100வது
ஓவியம் உயிராகிறதா
நாட்கள் நகர்ந்ததே
தெரியவில்லை ...!
அடுத்து என்ன நிழல்படம்
அடுத்து என்ன என்ற
ஆர்வத்திலே காலம்
கடந்ததே தெரியவில்லை....!
இத்தனை வாரம் சிறப்பாய்
சென்ற இந்த நிகழ்ச்சியில்
எத்தனை பேரின் ஆசை,
கனவு நிழல்படங்கள் ....!
எத்தனை பேரின் அறிவுக்கு
தீனி போட்டாய்.எத்தனை
கவிஞர்களை உருவாக்கினாய்...!
பலரது காதல்கள் கவிதைகளாக
காலச்சுவட்டில் பதிவாகின
சிலரது குமுறல்கள் கவிதைகளாக
கொந்தளித்தன ...!
சிலரது நட்பு சிலாகித்து
செதுக்கியது கவிதையாக
சிலரது துயரங்கள்
இறக்கி வைக்கப்பட்டது
கவிதையாக ....!
எவ்வளவு வித்தியாசமாக
நிழல்படம் கொடுத்தாலும் சவாலாக ஏற்று
வண்ணமயமான வார்த்தைஜாலம்
கொண்டு அவர்களது படைப்புக்களை
வழங்கச்செய்தாய்...!
இன்று நானும் கூட எனதருமை
தாய்மொழியின் அழகும் பெருமையும்
உன்னாலே கற்றுணர்ந்து சற்றே
கிறுக்கவும் கற்றுக்கொண்டேன்...!
உன்னால் இந்த நண்பர்கள்
இணையதள பொதுமன்றம்
பெருமைகொள்கிறது
பல நண்பர்களின் திறமைகளை
வெளிக்கொண்டு வந்ததால் ...!