FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 30, 2016, 10:11:59 PM

Title: ~ வடாம் ~
Post by: MysteRy on April 30, 2016, 10:11:59 PM
வடாம்

வடாமுக்கு மாவு கிளறும்போது உப்பை ஒரு பங்கு குறைத்துச் சேர்க்க வேண்டும். அப்போதுதான் பொரிக்கும்போது உப்பின் அளவு சரியாக இருக்கும்.

* எலுமிச்சம்பழத்தை அதிகமாகப் பிழிந்தால் மாவு சிவந்து விடும்.

* மாவு சரியாக வேகவில்லை என்றால் வடாம் பிழிந்த பிறகு அதிகமாகத் தூள் விழும். அதனால் மாவைப் பக்குவமாக வேகவைக்க வேண்டும்.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpattivaithiyam.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F10%2Fvadamvadam-recipevadam-samayal-kurippuvadam-seimurai-vadam-tamil-nadu-style.jpg&hash=b656cb495c3d80181052c71a68eaadc5652beb8e)

* ஜவ்வரிசி வடாம், அரிசி வடாம் செய்யும்போது பச்சை மிளகாயுடன் பூண்டு பற்களையும் அரைத்துச் சேர்த்தால் மணமாக இருக்கும்.

* அவல் கருவடாம் செய்யும்போது அவலை 10 நிமிடம் ஊற வைத்தால் போதும். அப்போதுதான் வடாமைப் பொரிக்கும்போது கரகரப்பாக இருக்கும்.

* வடாம் மாவுடன் சிறிது கறிவேப்பிலையை அரைத்துச் சேர்த்தால் தனிச் சுவையுடனும் மணத்துடனும் இருக்கும்.