FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 30, 2016, 08:58:35 PM
-
வெஜிடேபுள் கொத்து பரோட்டா
மீதம் ஆன பரோட்டாவில் தால் கொத்து பரோட்டா செய்வார்கள்// தேவையானவை கோதுமை பரோட்டா = 4 எண்ணை = முன்று தேக்கரண்டி பட்டர் (அ) நெய் = ஒரு தேக்கரண்டி தக்காளி = ஒன்று வெங்காயம் = ஒன்று பச்ச மிளகாய் = ஒன்று கொத்துமல்லி கருவேப்பிலை = சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் = ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள் = அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் = சிறிது உப்பு = ருசிக்கு தேவையான அளவு கேபேஜ் = பொடியாக அரிந்தது 4 மேசை கரண்டி கேரட் = கால் துண்டு பொடியாக அரிந்தது கேப்சிகம் = பொடியாக அரிந்தது முன்று மேசை கரண்டி பீன்ஸ் = பொடியாக அரிந்தது நான்கு ஸ்பிரிங் ஆனியன் = இரண்டு ஸ்டிக் ப்ரோஜன் பீஸ் மற்றும் கார்ன் = இரண்டு மேசைகரண்டி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpattivaithiyam.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F10%2Fegetable-koththu-parota-in-tamil-egetable-koththu-parota-samayal-kurippucooking-tips-tamil-egetable-koththu-parotaegetable-koththu-parota-seivathu-eppadi.jpg&hash=3cd14cb8b4177c31c4a750aa3c8ccb79e1f5c049)
செய்முறை பரோட்டாவை அடுக்கி வைத்து கத்திரி கோலால் குறுக்கும் நெடுக்குமாய் பொடியாக கட் பண்ணி கொள்ளவும். காய்கறிகளை சுத்தம் செய்து பொடியாக அரிந்து வைக்கவும். எண்ணையை காயவைத்து ஒரு சிறு பட்டை சேர்த்து வெங்காயம், இஞ்சி பூண்டு கருவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து தாளிக்கவும். வெங்காய தாள், கேப்சிகம் தவிர மற்ற காய்களை சேர்த்து நன்கு வதக்கவும். மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வதக்கி பிறகு இப்போது வெஙகாய தாள், கேப்சிகம் சேர்த்து வதக்கி ஒரு நிமிடம் வேக விட்டு பொடியாக வெட்டிய பரோட்டாக்களை சேர்த்து நன்கு கிளறி மசாலாக்கள் பரோட்டாவுடன் சேர்ந்ததும் இரக்கிவிடவும். கடைசியாக எலுமிச்சை சாறு, மிளகு தூள் தூவி கெட்சப்புடன் சாப்பிடவும்.