FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 30, 2016, 02:43:25 PM
-
பேபி கார்ன் 65
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F04%2Fba-3.jpg&hash=308e4cd089de05af79bc54e4b9ed80f1d5007793)
தேவையான பொருட்கள்:
பேபி கார்ன் – 8 (சிறியது)
சாட் மசாலா பவுடர் – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
மாவிற்கு…
மைதா – 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1/4 டீஸ்பூன்
தயிர் – 3 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
சமையல் சோடா – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பேபி கார்னை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பௌலில் மாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பேபி கார்ன்னை மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து மேலே சாட் மசாலாவைத் தூவினால், பேபி கார்ன் 65 ரெடி!!!