FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 30, 2016, 02:08:00 PM
-
பிரண்டை துவையல்
பிரண்டை – ஆய்ந்தது – 1 கரண்டி
உளுந்து- 50கிராம்
கடலை பருப்பு – 50 கிராம்
மிளகாய் – 7
புளி – சிறு எலுமிச்சையளவு
எள் – 1 கரண்டி
கருவேப்பிலை – சிறிது
உப்பு – தேவைக்கு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpattivaithiyam.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F10%2Fpirandai-thuvayal-iyer-samayalpirandai-thuvayal-tamil-cooking-tips-in-tamil-iyangar-iyangar-tamil-nadu-recipe-e1445961095264.jpg&hash=f31b48d2c1cb2a150f2fde54cfc648e87874553b)
தயாரிக்கும் முறை
செய்முறை –
பிரண்டை,கருவேப்பிலை இரண்டையும் ஆய்ந்து,அலசி வைக்கவும்.பருப்புகள்,மிளகாய்,புளி,எள் எல்லாவற்றையும் வாணலியில்
வறுத்து வைக்கவும்.பிறகு பிரண்டை,கருவேப்பிலை இரண்டையும் வதக்கி வைக்கவும்.ஆறியதும் மிக்ஸியில் உப்புடன் வதக்கியவற்றையும்,வறுத்தவற்றையும் சேர்த்து அரைத்து எடுக்கவும்.பிரண்டை பித்தத்தையும்,வாயுவையும் கட்டுபடுத்தும்.பசியின்மை போக்கும்.மூலத்திற்கு நல்லது.எலும்பிற்கு பலம்.