FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 29, 2016, 10:54:31 PM
-
சம்பா ரவை கிச்சடி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F04%2F%25E0%25AE%259A%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BE-%25E0%25AE%25B0%25E0%25AE%25B5%25E0%25AF%2588-%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%259A%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%259F%25E0%25AE%25BF-1.jpg&hash=da8cc153aba720e58d34173fa6fbf01ca8ab32c2)
தேவையான பொருள்கள்
சம்பா ரவை – 1/2 கப்,
பச்சை பட்டாணி – 1/2 கப்,
கேரட் – 1 (நறுக்கியது),
வெங்காயம் – 1 (நறுக்கியது),
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது),
இஞ்சி – 1/2 டீஸ்பூன் (துருவியது),
கடுகு – 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது),
தண்ணீர் – 3 கப்,
எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.
சம்பா-ரவை-கிச்சடி
செய்முறை
முதலில் சம்பா ரவையை நீரில் அலசி, நீரை முற்றிலும் வடிகட்டி தனியாக வைக்க வேண்டும். பின்னர் 2 கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் ரவையைப் போட்டு நன்கு 5 நிமிடம் கொதிக்க விட்டு, பின் அதனை இறக்கி, நீரை வடிகட்டி வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்பு துருவிய இஞ்சியை சேர்த்து கிளறி, பச்சை பட்டாணி மற்றும் கேரட் சேர்த்து, பிரட்டி 2 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும். பிறகு அத்துடன் சம்பா ரவையை சேர்த்து, 1 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, குக்கரை மூடி, தீயை குறைவில் வைத்து, 2 விசில் விட்டு, இறக்க வேண்டும். பின் குக்கரை திறந்து, அதன் மேல் கொத்தமல்லியை சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.