FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on April 29, 2016, 10:11:49 PM

Title: ~ பாட்டிலில் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் ~
Post by: MysteRy on April 29, 2016, 10:11:49 PM
பாட்டிலில் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள்

குழந்தை நேரிடையாக அம்மாவிடம் பால் குடிக்கும்போது, வாயை நன்றாக திறந்து நாக்கை வெளியே நீட்டியபடி பாலைக் குடிக்கும். ஃபீடிங் பாட்டிலில் பால் குடிக்கும்போது, குழந்தைகளின் வாய் குவியும். நாக்கு மடங்கி கொள்ளும். பாட்டில் ஃபீடிங் எடுத்துக்கொள்ளும் குழந்தைகளால் உறிஞ்சி குடிக்க முடியாது. அதன் காரணமாக, பாலை விழுங்கும்.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F04%2Fgg-1.jpg&hash=26df6d0d402f025f3b48ae16a3dcd009a8a7d2e8)

மூச்சு விடாமல் குடித்து முடிக்கும். அதனால், பாலை குடித்து முடித்த பிறகு குழந்தைகளுக்கு மூச்சு இரைக்கும்.தாயிடம் பால் குடித்தல், கப்பில் பால் குடித்தல் பழக்கம் இல்லாத குழந்தைகளுக்கு சுவாசக்கோளாறு போன்ற பல பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.
பாட்டிலில் பால் அருந்தும்போது, பாலோடு சேர்த்து நிறைய காற்று வயிற்றின் உள்ளே செல்லும். இதனால், பாட்டில் பழக்கம் உள்ள குழந்தைகளுக்கு வாயுத்தொல்லை ஏற்பட்டு (Gastric Problem), வயிறு உப்புசத்தால் (Colic) அவதிப்படும். மேலும், பாட்டிலில் பால் குடிக்கும் வழக்கம் உடைய குழந்தைகள் மாலை 6 மணிக்கு மேல், தொடர்ந்து 2-3 மணிநேரம் அழுது கொண்டே இருக்கும். இதற்காக, குழந்தைகளுக்கு மருந்து (Colic Drops) கொடுப்பார்கள்.
சங்கில் பால் குடிக்கும் பழக்கம் கொண்டுள்ள குழந்தைகளால் மீண்டும் அம்மாவிடம் பால் குடிக்க முடியும். அதோடு, குறுகிய காலத்தில் டம்ளரில் பால் குடிக்கவும் பழகிக் கொள்ளும். ஃபீடிங் பாட்டிலில் குடிக்க வைப்பது சுகாதாரமானதும் கிடையாது. கிருமித் தொற்று அதிக அளவில் இருக்கும். அதனால், குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு உண்டாகும்.
பாட்டிலில் குடிக்க வைப்பதற்குப் பதிலாக, கப்பில் பால் அருந்த வைப்பது மிகவும் நல்லது. அம்மாவிடம் பால் குடிக்கும் பழக்கம் உடைய குழந்தைகளுக்கு தாயின் வாசனை, அரவணைப்பு கிடைக்கும். இந்த குழந்தைகள் ரசித்து பாலைக் குடிக்கும். ஃபீடிங் பாட்டில் பழக்கம் உடைய குழந்தைகளுக்கோ அம்மாவின் வாசனை, அரவணைப்பு ஆகியவையும் கிடைக்க வாய்ப்பு கிடையாது.
குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் கொடுக்கப்படுகின்ற கோல்டன் ஹவர்ஸ் ஃபீடிங் (Golden Hours Feeding) மிகவும் முக்கியம்.குழந்தைகளுக்கு கப்பில் பால் புகட்டும் வழக்கம் நிறைய பேருக்கு தெரிவது கிடையாது. பெரும்பாலான டாக்டர்களுக்கே இது பற்றி தெரிவது இல்லை என்பதுதான் ஆச்சரியமான விஷயம்!’’
ஃபீடிங் பாட்டில் பழக்கம் உடைய குழந்தைகளுக்கோ அம்மாவின் வாசனை, அரவணைப்பு ஆகியவையும் கிடைக்க வாய்ப்பு கிடையாது..