FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 29, 2016, 10:01:20 PM
-
டிரை நட்ஸ் மில்க் ஷேக்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F04%2Fsa-4.jpg&hash=899179dc7ad617aab1b9d6226b59d078222970bf)
தேவையான பொருட்கள் :
பாதாம் – 4
பிஸ்தா – 4
அக்ரூட் – 4
முந்திரி – 4
பேரீச்சம் பழம் – 2
பால் – 1 டம்ளர்
தேன் – 2 தேக்கரண்டி
ஐஸ் கியூப்ஸ் – சிறிதளவு
செய்முறை:
* பாதாம், பிஸ்தா, அக்ரூட், முந்திரி ஆகியவற்றை தண்ணீர்விட்டு ஊறவைத்துக் கொள்ளவும்.
* பிறகு பாலை காய்ச்சி ஆறவைத்துக் கொள்ளவும்.
* பின்னர் ஊறிய பருப்பு வகைகளின் தோலை நீக்கி, அதனுடன் கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று அடித்துக் கொள்ளவும்.
* அத்துடன் தேன், பால், ஐஸ் கியூப்ஸ் சேர்த்துக் கொண்டு, இந்தக் கலவையை மீண்டும் மிக்ஸியில் சுழற்றி எடுத்து கண்ணாடி கப்பில் ஊற்றி பருகலாம்.
* சூப்பர் டேஸ்ட், சூப்பர் சத்து.