FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 29, 2016, 06:36:05 PM
-
உருளைக் கிழங்கு அப்பம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F04%2Ffff-2.jpg&hash=4604aa0f86cb05abd44a791d214a649dcd61fa22)
தேவையான பொருட்கள்:
உருளைக் கிழங்கு – 4
பொட்டுக்கடலை மாவு – 100 கிராம்
பச்சரிசி மாவு – 200 கிராம்
தக்காளி – 3
பச்சை மிளகாய் – 3
தேங்காய்த் துருவல் – அரை கப்
மிளகாய்த் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 டீஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு
எண்ணெய், உப்பு – தேவைக்கு
செய்முறை :
உருளைக் கிழங்கை உப்பு சேர்த்து வேகவைத்து, தோல் உரியுங்கள்.
இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய் இவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கெட்டியாக அரையுங்கள். அரைத்த விழுதுடன் தேவையான அளவு உப்பு, பெருங்காயத் தூள், மிளகாய்த் தூள், பச்சரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு சேர்த்துச் சிறிதளவு தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்துக்குக் கரையுங்கள். வேகவைத்த உருளைக் கிழங்கையும் அதனுடன் சேர்த்து நன்றாகக் கரையுங்கள்.
அடி கனமான வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, கரைத்த மாவைக் கரண்டியால் எடுத்து ஊற்றுங்கள். மிதமான தீயில் வேகவைத்து, இருபுறமும் வெந்ததும் எடுத்துவிடுங்கள். இதனுடன் மயோனீஸ் சாஸ் தொட்டுக் கொண்டுச் சாப்பிடலாம்.