FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 29, 2016, 06:28:24 PM

Title: ~ சில்லி பரோட்டா ~
Post by: MysteRy on April 29, 2016, 06:28:24 PM
சில்லி பரோட்டா

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F04%2Fsil.jpg&hash=b422c8d44a79e2500938c9c15b107609a8509bc2)

தேவையான பொருள்கள்:

மைதா – 1 கப்
பெரிய வெங்காயம் – 1
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
சோயா சாஸ் – 1 ஸ்பூன்
தக்காளி சாஸ் – 3 ஸ்பூன்
கேசர் பவுடர் – 1/2 ஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது – 1 ஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்,
சர்க்கரை – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வெங்காயம், நறுக்கி கொள்ளவும் மைதாவை சிறிது உப்பு, ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
சப்பாத்திகளாக தேய்த்து, நான்காக மடித்து தேய்த்து வைக்கவும். தோசைக்கல்லை காய வைத்து, சப்பாத்திகளை சிவக்காமல், சுட்டு எடுக்கவும்.
சுட்ட சப்பாத்திகளை சதுர துண்டுகளாக நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வதக்கும் போதே மிளகாய் தூள், சிவப்பு கலர் கேசரி பவுடர், சோயா சாஸ், தக்காளி சாஸ், சர்க்கரை, உப்பு சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும், நறுக்கிய சப்பாத்தி துண்டுகளை சேர்த்து, ஒரு கை தண்ணீர் தெளித்து, நன்கு கிளறி இறக்கவும்.