FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 28, 2016, 11:19:58 AM
-
வாழைப்பூ-65
(https://scontent.fszb1-1.fna.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/13076616_963694967078367_4820448116962094401_n.jpg?oh=5444067a79c5aed96f8f61bf5733a527&oe=57B31998)
இந்த உணவு நான் மேட்டுபாளையத்தில் எனது நண்பர் மாரிசாமி அவர்கள் திருமண வரவேற்பு விழாவிற்கு சென்ற போது இவ்வகை உணவு பரிமாற பட்டது. நான் அந்த சமையல் நிபுணரிடம் இருந்து பெறப்பட்ட குறிப்பு தான் இது.
தேவையானவை:
வாழைப்பூ - 1
(அதில் உள்ள தனித்தனிப் பூக்களாக 30 ஐ எடுக்கவும்)
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 3 டேபிள்ஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
கெட்டித் தயிர் - 100 மில்லி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
1.வாழைப்பூவில் உள்ள தனித்தனிப் பூக்களின் நடு நரம்பை எடுத்துவிட்டுக் கழுவி வைக்கவும்.
2.ஒரு பாத்திரத்தில் எண்ணெய், வாழைப்பூ நீங்கலாக தேவையானவற்றில் உள்ள மற்ற அனைத்தையும் ஒன்றாக்கி தண்ணீர் சிறிது தெளித்து சேர்த்துக் கிளறவும்.
3. இந்த மாவுக்கலவையை இருபது நிமிடம் ஊற விடவும்.
4.அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவில் வாழைப்பூவை நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுத்துப் பரிமாறவும்.