FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 26, 2016, 11:29:20 PM
-
இறால் வறுவல் !!!
(https://scontent.fszb1-1.fna.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/12998540_956624537785410_744665261968672102_n.jpg?oh=07f067424d3e3b1f2e6684ba59e96404&oe=57B6425A)
தேவை?
இறால் - அரை கிலோ
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லித் தூள் - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
அரைக்க வேண்டிய பொருட்கள்
தேங்காய் - தேவையான அளவு
தாளிக்க வேண்டிய பொருட்கள்
பட்டை - 2
கிராம்பு - 3
எப்படி செய்வது?
முதலில் இறாலை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும். தேங்காயை அரைத்து வைத்து கொள்ளவும்.பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூளை போட்டு வதக்கியவுடன் இறாலை போட்டு வதக்கவும். பின்பு அரைத்து வைத்துள்ள தேங்காயை அதில் ஊற்றவும். தண்ணீர் சுண்டும் வரை வேக வைக்கவும். இறால் வறுவல் ரெடி