FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 26, 2016, 11:25:49 PM

Title: ~ மோர் இட்லி.. ~
Post by: MysteRy on April 26, 2016, 11:25:49 PM
மோர் இட்லி..

(https://scontent.fszb1-1.fna.fbcdn.net/hphotos-xta1/v/t1.0-9/13043246_958726647575199_4287529454141744242_n.jpg?oh=27205e5b2e1a83c0ff16e3a9697c28bb&oe=57AB5BFD)

தேவையான பொருட்கள்:

இட்லி மாவு - 2 கப்
கெட்டியாக கடைந்த மோர் - 2 கப்,
மோர் மிளகாய் - 7,
சிவப்பு மிளகாய் - 2,
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

• இட்லி மாவை மினி இட்லிகளாகவோ, மீடியம் இட்லிகளாகவோ வேக வைத்து எடுக்கவும். பெரிய இட்லிகளாக இருந்தால் சம அளவில் வெட்டிக் கொள்ளவும்.
• மோரில் மூன்றில் இரண்டு பங்கு எடுத்து... தாளித்த வெந்தயம், உப்பு ஆகியவற்றை அதனுடன் சேர்த்து, வறுத்த சிவப்பு மிளகாயை நசுக்கிப் போட்டு, நன்கு கலந்து வைக்கவும்.
• மோர் மிளகாயைத் தனியாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.
• மீதியுள்ள ஒரு பங்கு மோரில் சிறிதளவு நீர் விட்டு கலந்து, சூடான இட்லிகளை அதில் போட்டெடுத்து, பெரிய தாம்பாளத்தில் பரத்தவும்.
• தாளித்து வைத்த கெட்டி மோரில், வறுத்த மோர் மிளகாயை நசுக்கிப் போடவும். இட்லிகள் மீது இந்த மோர் கலவையை விட்டு, கொத்தமல்லித்தழை தூவி, பவுலில் வைத்து, ஸ்பூன் போட்டு சாப்பிடக் கொடுக்கவும்