FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 26, 2016, 11:23:02 PM
-
ஃப்ரூட் மணிபேக்!!!
(https://scontent.fszb1-1.fna.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/13076557_959456574168873_5318876559287523752_n.jpg?oh=8b89621a72bc2ae5079be6155302abf6&oe=579D32D2)
தேவை?
மைதா மாவு - 1/4 கிலோ,
பேகிங் சோடா - 1 டீஸ்பூன்,
டால்டா - 2 டீஸ்பூன்,
வெல்லம் - 1/4 கிலோ,
ஏலக்காய் தூள்- சிறிதளவு,
திராட்சை, ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா, மாம்பழம், பப்பாளி பழங்கள் - 1 கப்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
மைதா மாவில் பேகிங் சோடா, உப்பு, காய்ச்சிய டால்டா சேர்த்து சிறிதளவு நீர் விட்டு சப்பாத்தி மாவு போல் பிசைந்து 1/2 மணி நேரம் ஊறவிடவும். பழங்களின் தோல், விதைகள் நீக்கி வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து வைக்கவும். சப்பாத்தி மாவில் சிறு உருண்டை எடுத்து அதில் பழக்கலவை 1 டீஸ்பூன் வைத்து, சுருக்கு பை போல் மூடி, காய்ந்த எண்ணெயில் பொன்னிறமாகப் பொரிக்கவும்