FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 26, 2016, 10:37:04 PM
-
முருங்கைக் கீரை பொரியல்
தேவையான பொருட்கள்:
முருங்கைக் கீரை- ஒரு கட்டு
வெங்காயம் – 150 கிராம்
பச்சை மிளகாய் – 2
பெருங்காயத்தூள் -1 டீஸ்பூன்
இஞ்சி – சிறுதுண்டு
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் -1 குழிக்கரண்டி
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் – சிறிதளவு (தாளிக்க)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpattivaithiyam.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F10%2Fmurungai-keerai-poriyal-recipemurungai-keerai-fry-cooking-tips-in-tamilmurungai-keerai-samyal-kurippu-tamil-nadu-style.jpg&hash=378b65bd4242212bfffac3bb301ad00ad5847932)
செய்முறை:
முருங்கைக் கீரையை உருவி, நன்கு அலசவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் சேர்த்துத்தாளிக்கவும்.
பின் நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
முருங்கைக் கீரை, தேவைக்கேற்ப உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து சிறிது நீர் தெளித்து,கீரையை வேக விடவும். (குறைந்த தீயில்)
கீரை வெந்ததும் இறக்கி, ஆறியதும் சாப்பிடவும்.
குறிப்பு: முருங்கைக் கீரை பொரிக்கும் பொழுது, முக்கால் வேக்காடு வேக வைத்த துவரம்
பருப்பு அல்லது பச்சைப் பருப்பு சேர்த்துக் கொண்டால், கூடுதல் ருசி கிடைக்கும்