FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 26, 2016, 10:18:10 PM
-
பாகற்காய் சாம்பார்
பாகற்காய் & 2 வளைவான வில்லைகளாக (சற்று கனமாக ) நறுக்கவும்
சின்ன வெங்காயம் & 15
தக்காளி & 1
புளி & எலுமிச்சை அளவு
உப்பு & தேவைக்கேற்ப
சாம்பார்பொடி & 2 ஸ்பூன்
துவரம் பருப்பு & உழக்கு
மஞ்சள்தூள் & 1 சிட்டிகை
வறுத்து பொடி செய்ய:
பச்சரிசி & ஒரு ஸ்பூன்
வெந்தயம் & ஸ்பூன்
துவரம் பருப்பு & 2 ஸ்பூன்
வர மிளகாய் & 2
பெருங்காயம் & ஒரு சிட்டிகை
தாளிக்க:
எண்ணெய் & 8 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு & ஒரு ஸ்பூன்
கடுகு & ஒரு ஸ்பூன்
பெருங்காயம & ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை & ஒரு ஆர்க்
வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு பாகற்காயை வதக்கிக் கொள்ளவும். (கசப்பு பிடிக்காதவர்கள் வேக வைத்து நீரை வடித்துவிட்டு உபயோகிக்கவும்) துவரம் பருபை மஞ்சள்பொடி சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpattivaithiyam.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F10%2Fpagarkai-sambarpagarkai-sambar-cooking-tips-in-tamilpagarkai-sambar-samayal-kurippupagarkai-sambar-recipe-in-tamil-e1445521003512.png&hash=8c7c9513617c1d0b4c829007917c6561e13f8e39)
அதில் வதக்கிய காய், தக்காளி, வெங்காயம், சாம்பார்¢ பொடி சேர்த்து வேகவிட்டு காய் வெந்ததும், புளியை உப்புடன் சேர்த்து ஒரு கப் நீரில் கரைத்து, அதில் ஊற்றவும்.
10 நிமிடங்கள் கழித்த வறுத்தரைத்த பொடியைத் தூவி, பின்னர் எண்ணை சுடவைத்து தாளித்து குழம்பில் ஊற்றி கொதிக்க விட்டு இறக்கவும்.