FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 26, 2016, 09:23:46 PM

Title: ~ சாமை அரிசி இடியாப்பம் ~
Post by: MysteRy on April 26, 2016, 09:23:46 PM
சாமை அரிசி இடியாப்பம்

தேவையானவை:

சாமை அரிசி – ஒரு கப்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

• சாமை அரிசியை 2 மணி நேரம் நன்றாக ஊறவைத்து ஊறிய அரிசியை நன்கு மிருதுவாக, சிறிது உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். மாவு கெட்டியாக இருப்பது நல்லது.

• உடனே இந்த மாவை இட்லித் தட்டில், இட்லி போல நன்கு வேகவிடவும். பிறகு இதனை, இடியாப்ப அச்சில் பிழிந்து எடுக்கவும்.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpattivaithiyam.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F10%2Fsamai-arisi-idiyappamsamai-arisi-idiyappam-samyal-kurippucooking-tips-samai-arisi-idiyappam-in-tamil-samai-arisi-idiyappam-recipe-how-to-make.jpg&hash=57ad34b9d9b771670c063f5c198dccebfc7171a4)

பலன்கள்:

சாமையில் நார்ச் சத்து அதிகம் உள்ளது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். எண்ணெய் சேர்க்காமல், நீராவியில் வேகவைப்பதால், உடலுக்கு நன்மை பயக்கும்.