FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on April 26, 2016, 07:28:52 PM

Title: ~ கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ~
Post by: MysteRy on April 26, 2016, 07:28:52 PM
கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

ஒரு கேரட்டில், நாள் ஒன்றுக்கு தேவைப்படும் சத்துக்கள் எவ்வளவு இருக்கிறது தெரியுமா?
விட்டமின்-A சத்துக்கள் 210% உள்ளது.
விட்டமின் கே 10% உள்ளது.
விட்டமின் சி 6% உள்ளது.
கால்சியம் 2% உள்ளது.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F04%2Ffresh-carrot-786648.jpg&hash=63ab037d9f6b28e3c8298a0af2f79c3ff5882038)

– கேரட்டின் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்!:
– கண் பார்வையை மேம்படுத்தும்.
– புற்றுநோய் வராமல் தடுக்கும் குணம் கேரட்டுக்கு உள்ளது.
– உடல் செல்களை இளமையாக வைத்துக்கொள்ள உதவும்.
– தோலை பளபளப்பாக வைத்துக்கொள்ள கேரட் உதவும்.
– நோய் தொற்றுக்களில் இருந்து உடலை காப்பாற்றும் ஆன்டிசெப்டிக்காகவும் கேரட் பயன்படுகிறது.
– இதயம் தொடர்பான நோய்களில் இருந்தும் கேரட் காப்பாற்றக்கூடியது என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
– உடலில் சேரும் நச்சு பொருட்களை அகற்றும் வல்லமை கேரட்டுக்கு உண்டு.
– சொத்தை பல் வரவிடாமல் தடுக்கும் தன்மையும் கேரட்டுக்கு உள்ளது.
– வாரத்துக்கு ஆறு கேரட்டாவது சாப்பிடுபவர்களுக்கு பக்கவாதம் வரும் வாய்ப்பு குறைவு என்கிறது ஹார்வார்ட் பல்கலைக்கழக ஆய்வு.