FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on April 25, 2016, 09:33:24 PM
-
மாம்பழ மோர்க்குழம்பு செய்வது எப்படி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F04%2Fmang.jpg&hash=3c1f185c6146a72c8c9d7f5867fc8abd27d45110)
தேவையான பொருட்கள் :
புளிப்பும் தித்திப்புமான சிறு மாம்பழங்கள் – 2,
புளித்த மோர் – 2 கப்,
அரிசி – ஒரு டீஸ்பூன்,
சீரகம், கடுகு – தலா அரை டீஸ்பூன்,
வெந்தயம் – கால் டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – ஒன்று,
காய்ந்த மிளகாய் – 2,
தேங்காய் துருவல் – கால் கப்,
தேங்காய் எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
* வாணலியில் ஒரு கப் தண்ணீர் விட்டு மாம்பழங்களை வெட்டிப் போட்டு சிறிது உப்பு சேர்த்து வேக விடவும்.
* தேங்காய் துருவல், அரிசி, சீரகம், ஒரு காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து மையாக அரைத்து மோரில் கலந்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வெந்து கொண்டு இருக்கும் மாம்பழங்களுடன் கலக்கவும் (தேவையானால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்).
* மற்றொரு கடாயில் அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், ஒரு காய்ந்த மிளகாய் தாளித்து சேர்க்கவும்.
* குழம்பு பொங்கி வரும்போது கீழே இறக்கி, கறிவேப்பிலை சேர்க்கவும்.
* மாம்பழ மோர்க்குழம்பு ரெடி.